இளம்பெண்ணுக்கு கணவர் மற்றும் மாமியாரால் நேர்ந்த அவலம்..!


உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 23 வயதான நிஷா என்ற இளம்பெண்ணிற்கும், விஷ்ணு என்ற இளைஞருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிஷாவின் தந்தை தனது மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது, நிஷா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து, கணவர், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததால் தான் நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் நிஷாவின் கணவர் மற்றும் அவரது மாமியார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!