சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிரடி கைது..!


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5-வது நபரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!