27 நட்சத்திரத்துக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவ தலங்கள்!


27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவர் கோவில்கள் உள்ளன. 27 நட்சத்திரக்காரர்களும் அவர்களுக்கு உகந்த பைரவர் கோவில்களில் வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.

1. அஸ்வினி : ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2. பரணி : ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை. 4. ரோகிணி : ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.

5. மிருகசீரிஷம் : ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6. திருவாதிரை : ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி. மீ. )

7. புனர்பூசம் : ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமி கள் மடாலயம்.

8. பூசம் : ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9. ஆயில்யம் : ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

10. மகம் : ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டை யின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மகா தேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லி கார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15. சுவாதி:ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16. விசாகம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

17. அனுஷம் : ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18. கேட்டை : ஸ்ரீகதாயுத பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

19. மூலம் : ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20. பூராடம் : ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

21. உத்திராடம் : ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22. திருவோணம் : திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23. அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

24. சதயம் : ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25. பூரட்டாதி : கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.

26. உத்திரட்டாதி : ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்- சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்ப கோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27. ரேவதி : ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில். -Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!