உடலை பற்றி மோசமாக ‘செக்ஸி’ யாக வர்ணித்த ரசிகர்… பதிலடி கொடுத்த நடிகை..!


தமிழ், ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை பியா பாஜ்பாயின் உடல்வாகு குறித்து வெடுக்கென்று கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவருக்கு நறுக்கென பதில் தந்துள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

சினிமா நடிகைகள் பலர் தங்களுடைய போட்டோஷுட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவது அதிகமாகி வருகிறது. அதிலும் பாலிவுட் நாயகிகள் அடிக்கடி தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதில் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி எல்லை வரை சென்று டாப்லெஸ் படங்களையும் வெளியிட்டு வாய்ப்பு பெறும் யுக்தியை கையாள்கிறார்கள்.

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சிப் படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளினார்.

இதைத் தொடர்ந்து தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை பியா பாஜ்பாயும் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை டுவிட்டரில்பதிவு செய்திருக்கிறார்.


பார்ப்பதற்கு டாப்லெஸ் போஸ் கொடுத்திருப்பது போன்று இருக்கும் அந்தப் புகைப்படம் படுகவர்ச்சியாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், இப் படத்தில் ‘உங்களின் கால் தான் கவர்ச்சியான அழகைக் கெடுத்திருக்கிறது. மற்றபடி பார்ப்பதற்கு செக்ஸியாக உள்ளது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த பியா, ‘அப்போ எனது காலை வெட்டிவிடவா?’ என்று நறுக்கென பதிலளித்துள்ளார்.

தமிழில் ‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகன், கோவா, கோ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாடல் அழகியான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் தோன்றுகிறார். இவர் நடித்து முடித்துள்ள ‘அபி அண்ட் அனு’ என்ற படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!