20.05.2020 இன்றைய ராசி பலன்


மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த பொருளாதார பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்
இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். திருமண சுபகாரிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் சிறு சிறு முயற்சிகளும் அனுகூலப் பலனை அளிக்கும். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த வேலையிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவியால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மகரம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.

கும்பம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படும்.

மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மன உளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.– கணித்தவர்: ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன், Phone: 0091-7200163001, 9383763001

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!