சீனாதான் கொரோனா வைரஸை உருவாக்கியது! அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு!!


சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு ஏராளமான சான்றுகள்” உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மைக் பாம்பியோ கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை கையாளுவதில் சீனா தவறிழைத்து விட்டது.


அமெரிக்க உளவுத்துறையின் ஒரு அறிக்கையுடன் நான் உடன்படுகிறேன். அதில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்ற பரந்த அறிவியல் ஒருமித்த கருத்துடன்” ஒப்புக் கொண்டது.

முழு உலகமும் இப்போது பார்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன், நினைவில் கொள்ளுங்கள், சீனாவுக்கு தரமற்ற ஆய்வகங்களை இயக்கும் வரலாறு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான ஆரம்பகாலத்தில் சீன முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. தவறான தகவலை அளித்துள்ளது அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கியது.

ஜனாதிபதி டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்: பொறுப்புள்ளவர்களை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என கூறினார். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!