ஜெ.வை தீர்த்து கட்டி ஆட்சிக்கு வந்தவர் சசிகலா! பொன்னையன் பகீர் பேட்டி..!


சசிகலா ஆட்சிக்கு வர ஆசைப்பட்டு அதற்கு இடைஞ்சலாக இருந்த ஜெயலலிதாவை தீர்த்து கட்டிவிட்டார் என்று அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து தற்போது ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிவருகிறார்.

இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சி நிறுவனத்தின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறுகையில், அந்த புள்ளிகள் எம்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது விசாரணை கமிஷனிடம் அவர் என்ன கூறினார் என்பது நமக்கு தெரியாது.

என்பார்மிங் செய்யவில்லை
பணிப்பெண் முன்பே

என்பார்மிங் செய்யாவிட்டால் எப்படி அந்த புள்ளி வந்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றி கொண்டிருந்த பணிப்பெண் பார்க்கும்போது அவரை கட்டையால் அடித்தனர். சசிகலா கெட்டிக்காரி, அறிவாளி என்பதை ஒப்புக் கொள்கிறேன். இதை பல முறை மீடியாவிடம் தெரிவித்துள்ளேன். அந்த கெட்டிக்காரத்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு பயன்படுத்தி அந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டார்களே.


ஆட்சி கட்டிலுக்கு வர..
பிரசவம் பார்த்ததாக கூறுவது தவறு

ஜெயலலிதா இருக்கும் வரை ஆட்சி கட்டிலில் வர முடியாது என்பதற்காகவும் அவர் இடைஞ்சலாக இருப்பதாலும் அவரை தீர்த்து கட்டி விட்டு ஆட்சிக்கு வந்தால் எப்படி. ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவுக்கு நிறைய பணம் கொடுத்து பொய் சாட்சி கூறவைத்ததால் அவர் அவரது அத்தைதான் ஜெ.வுக்கு பிரசவம் பார்த்ததாக கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் எங்கே…
மத்திய அரசுக்கு கீழ்ப்படியவில்லை

இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா இருக்கும் போது வராமல் தற்போது வந்து அவரது வாரிசு என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும். ஜெயலலிதாவுக்கு குழந்தை இல்லை. தமிழ் மொழிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது என்பது ஆணித்தரமான உண்மை. மாநில அதிகாரத்திலும், கல்வி அதிகாரத்திலும் மத்திய அரசு தலையிடுகிறது.

மாநில பட்டியலில் இருந்த கல்வி
திராவிடக் கட்சியை தவிர்த்து….

மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலில் கொண்டு சென்று தற்போது இந்தியை திணிக்கும் கொடுமையான செயலை மத்திய அரசு செய்கிறது. திராவிட அரசியலை தவிர்த்து எந்த ஒரு கட்சியையும் தமிழ் மண் ஏற்றுக் கொள்ளாது என்றார் பொன்னையன்.-Source:tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!