அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் செல்வம் பெருகும்..!


அட்சய திருதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன் கோவிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும்

* அட்சய திருதியை அன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்தும், 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் அவர்கள் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். இந்த 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

* கேரளாவில் உள்ள காலடி கண்ணன் கோவிலில், அட்சய திருதியை அன்று, கனகதாரா யாகம் நடைபெறும். உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று, பெண்கள் அனைவரும் கலசத்தில் கவுரிதேவியை எழுந்தருளச் செய்து, சொர்ண கவுரி விரதம் கடைப்பிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரத முடிவில் தானமும் வழங்குவா்.

* பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில், அட்சய திருதியை அன்று நீராடினால் எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை ‘வைத்தமாநிதி’ என்றும், ‘செல்வம் அளித்த பெருமாள்’ என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்பதை ‘திருமணம்’ என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.

* அட்சய திருதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன் கோவிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும். திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!