கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் மகளை போனில் மிரட்டிய இளைஞர்! எதற்காக தெரியுமா..?


முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32). இவர் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றி கொண்டிருக்கின்றார். சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சகோதரரை பார்க்கசென்ற அவர், தற்செயலாக சாராவையும் பார்த்துள்ளார். அப்போதிருந்து சாரா மீது காதல் கொண்ட அவர், எப்படியோ அவரின் கைபேசி எண்ணை கண்டுபிடித்து சாராவுக்கு தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்துள்ளார்.


இதுகுறித்து சாரா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ரகசியமாக விசாரித்துவந்த போலீசார் சாராவுக்கு தொல்லை கொடுத்த அந்த நபரை மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சச்சின் மகளை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அதனால் தான் போன் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சாராவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார்.

அவருடைய குடும்பத்தினர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!