குண்டானவர்களுக்கு கொரோனாவால் அதிக ஆபத்து… இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்


இங்கிலாந்தில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிய பெரும்பாலான நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தது, தெரிய வந்ததுள்ளது.

கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கி விட்டது. 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இங்கிலாந்தின் 177 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15,100 நோயாளிகள் பற்றிய தகவல்களை திரட்டி அவர்களது வயது, பாலினம், உடல் ஆரோக்கியம் அடிப்படையில் ஒரு ஆய்வை அண்மையில் லண்டன் இம்பீரியல் காலேஜ் மற்றும் லிவர்பூல், எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அப்போது, பெரும்பாலான நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தது, தெரிய வந்தது. மேலும், இவர்கள் சிறிய அளவில் மட்டுமே நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதும், நோய் எதிர்ப்பு சக்தி தரும் காய்கறி, பழங்களை குறைந்த அளவில் உண்டு வந்திருக்கின்றனர் என்பதும் கண்டறியப்பட்டது. அதாவது, இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டதால் கொரோனா எளிதில் தாக்கியுள்ளது. ஏற்கனவே, மூச்சுத்திணறல் பிரச்சினை கொண்ட இவர்களின் நுரையீரலை கொரோனா ஊடுருவி தாக்கிவிட்டது, என்பதும் இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் கிடைத்த தகவல் ஆகும்.

எனினும், உடல்பருமன் கொண்டவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பது பற்றி இந்த ஆய்வில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!