புரட்டி எடுக்கும் கொரோனா… நிலைகுலைந்த அமெரிக்கா – ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் பலி..!


அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். மேலும், புதிதாக 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 24 லட்சத்து 6 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 16 ஆயிரத்து 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 54 ஆயிரத்து 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 914 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது.

உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 7 லட்சத்து 64 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 25 ஆயிரத்து 511 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 71 ஆயிரத்து 3 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 534 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!