கொரனோ பாதிப்பு.. கால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக வந்த டாக்டர் எடுத்த விபரீத முடிவு..!


பிரான்சில் கால்பந்து அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயல்பட்டுவந்த டாக்டர் தனக்கு கொரோனா வைரஸ் பரவியதால் தற்கொலை செய்து கொண்டார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 42 ஆயிரத்து 235 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாடில் இதுவரை 98 ஆயிரத்து 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 833 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெர்னெட் ஹன்சலிஸ்( 60 வயது) என்ற டாக்டர் பிரான்ஸ் நாட்டின் ரிம்ஸ் மாகாணத்தை சேர்ந்த லீக் ஒன் சைட் ஸ்டெடி டி ரிம்ஸ் எனப்படும் கால்பந்து கிளப் அணிக்கு மருத்துவ ஆலோசகராக கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

மனைவியுடன் வசித்து வந்த டாக்டருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பெர்னெட் நேற்று அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் ஸ்டெடி டி ரிம்ஸ் கிளப் கால்பந்து அணிக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!