சடலங்களுடன் 4 நாட்கள் வரை சாலையில் காத்திருக்கும் மக்கள்..! கொரோனோவின் சோகம்.!


தென் அமெரிக்காவின் வடமேற்கு ஓரத்தில் அமைந்துள்ள குடியரசு நாடான ஈக்குவேடார் நாட்டில், இறந்து போன தங்கள் சொந்தங்களின் உடல்களை 4 நாட்கள் வரை வீட்டிலும், சாலைகளிலும் வைத்திருக்கவேண்டிய நிலை உள்ளதாக அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரியநாடுகள் தொடங்கி சிறு சிறு நாடுகள் என உலகின் அணைத்து நாடுகளிலும் தாக்கிவருகிறது. இதில், 20 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட ஈக்குவேடார் நாட்டிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிவருகிறது.

இந்நாட்டில் இதுவரை 3,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 300 பேர் உயிர் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசு சரியான இறப்பு கணக்கினை வெளியே கூறாமல் மூடி மறைப்பதாகவும் அந்நாட்டு மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.

மேலும், பொருளாதர ரீதியாக பின்தங்கியுள்ள இந்நாட்டில் மிக குறைந்த அளவிலையே மருத்துவமனைகள் உள்ளது. இதனால் கொரோனா பாதித்த மக்களை வீடுகளிலையே தனிமைப்படுத்தி அவர்கள் குடும்பத்தினர் கவனித்துவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உயிர் இழக்கும் கொரோனா நோயாளிகளை நாங்கள் 4 நாட்கள் வரை வைத்திருந்து அதன் பிறகு அடக்கம் செய்கிறோம். அதிகாரிகள் சொல்லும் வரை தங்கள் அன்புக்குரியவர்கள் சடலங்களை வீடுகளிலும், சாலைகளிலும் வைத்துக்கொண்டு காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!