இத்தனை துயரத்திலும் இத்தாலி மக்கள் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்..!


சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1,213,192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 65,600 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான இத்தாலி மக்களின் புது முயற்சி உலகளவில் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கொரோனாவால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் உணவு இன்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனாவால் முற்றிலும் முடங்கிப்போயுள்ள இத்தாலியில் பசிக்கொடுமை மேலும் அதிகமாக உள்ளது. இதனால், அந்நாட்டில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த உணவு கூடையில் உணவு, தக்காளி, எலுமிச்சை போன்றவை போடப்படுகிறது.

பசியுடன் சாலைகளில் செல்பவர்கள் அந்த உணவுகளை எடுத்து சாப்பிடலாம். பெரும்பாலான வீடுகளின் முன் இந்த உணவு கூடை தொங்கவிடப்பட்டுள்ளது. இத்தாலி மக்களின் இந்த புது முயற்சி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!