மகிந்த ராஜபக்சவின் மைத்துனருக்கு பகிரங்க பிடியாணை.. எதற்காக தெரியுமா..?

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான ஜாலிய விக்கிரமசூரியவைக் கைது செய்ய கோட்டே நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

வொசிங்டனில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 132,000 டொலர் நிதியைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் சொத்து ஒன்றை வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், ஜாலிய விக்கிரமசூரிய கைது செய்யப்பட்டு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை அனுமதி பெற்று விடுதலையான அவர், மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு மாத விடுமுறை பெற்று அமெரிக்கா சென்றிருந்தார்.


இந்த நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது ஜாலிய விக்கிரமசூரிய நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்காக பிணைக் கையெழுத்திட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையிலேயே அவரைக் கைது செய்ய கோட்டே நீதிவான் நேற்று பகிரங்க பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.-Source:puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!