கூலி வேலைக்கு செல்லும் பெண் பட்டதாரி..! இப்படியும் ஒரு சகோதரியா..?


இலங்கையில் தனது சகோதரி ஒருவருக்காக பெண் பட்டதாரி ஒருவர் கூலி வேலைக்கு செல்லும் விடயம் தற்பொழுது தென்னிலங்லையிலுள்ளோரின் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வேலை வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே அவர் இவ்வாறு கூலி வேலைக்க்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

பெற்றோரை இழந்த நிஷ்ஷங்கா எனும் குறித்த பெண் நாற்பது வயதினைக் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அவருக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமையினால் தனது சகோதரியின் மருத்துவ செலவினை ஈடு செய்வதற்காக இவ்வாறு கூலி வேலைகளுக்குச் செல்வதாக சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர்,


“நான் கடந்த 2013ஆம் ஆண்டு கலைப் பிரிவில் பட்டதாரியாக வெளியேறினேன். ஆனால் அன்றிலிருந்து படிப்பிற்குத் தகுந்த வேலை வாய்ப்புக்களைப் பெற முடியவில்லை. எத்தனையோ அரசாங்க நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைகளுக்கு தோற்றியபோதும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் என் வயதும் ஏறிக்கொண்டே இருந்தது. எனது அப்பாவும் அம்மாவும் இப்பொழுது உயிருடன் இல்லை. எனது அக்கா பல வருடங்களாக சுகவீனமுற்ற நிலையில் உள்ளார். அவரது மருத்துவச் செலவுகளுக்காக மிகுந்த சிரமப் படவேண்டியிருந்தது. எனக்கும் வேலையில்லை, ஆதலால் இப்பொழுது தோட்டங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு எனது அக்காவின் மருத்துவச் செலவுக்கும் எமது வாழ்வாதாரத்துக்கும் பயன்படுத்திவருகிறேன்” என்றார்.

இதேவேளை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர், வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மோசமான நிலை இது என விவாதப்பொருளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.-Source: news.ibctamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!