18 பேருக்கு கொரோனா உறுதி – இலங்கையில் வெளிநாட்டவர்கள் தப்பி ஓட்டம்..!


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களில் 1,700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாகி உள்ள நிலையில் உதவிக்காக ராணுவமும் களம் இறக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி காணப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ராணுவம் சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை இத்தாலி உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி தெரிந்துள்ளது. ஆனால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக அவர்களை வெளியே தப்ப விட்டதாக கூறப்படுகிறது.

அவர்களை பிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!