கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு.. இந்தியாவில் 2 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது. 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.

கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436 ஐ தாண்டியுள்ளது, உலகெங்கிலும் 145 நாடுகளில் 145,810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்து உள்ளது. 67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 85பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16 ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்து உள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!