ஜெர்மனியில் கொரோனா வைரஸ்க்கு முதல் பலி..!


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜெர்மனி நாட்டில் முதல் முதலாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கு 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்து 112 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!