கள்ளக்காதல் விவகாரம்.. விமான நிலைய ஊழியர் அடித்துக் கொலை… உயிருக்கு போராடும் மனைவி..!


விமான நிலைய ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அசோக்நகர். 11-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி (37). இவரது மனைவி சோபனா (31). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் விசுவநாதன் (31) என்பவருடன் சோபனாவுக்கு தகாத உறவு இருந்தாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த முரளி, சோபனாவின் தவறான உறவை அறிந்த முரளி, மற்றம் ஷேபனாவின் தாயார் வசந்தா (50), சகோதரர் கண்ணன் (30) ஆகியோர் கண்டித்தனராம்.


இந்நிலையில், நந்தம்பாக்கம் பர்மா காலனி ராணுவ மைதானத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த விசுவநாதன் சோபனாவுடன் வந்து பேசிக் கொண்டிருந்தனராம். இதனை கண்ட சோபானாவின் கணவர் முரளி, சகோதரர் கண்ணன், தாயார் வசந்தா ஆகியோர், சோபனா மற்றும் விசுவநாதனை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் காயமடைந்து மயங்கி விழுந்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை அடுத்து, நந்தம்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர். அங்கு, விசுவநாதன் உயிரிழந்து சடலமாக கிடந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சோபனாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தொடர்ந்து விசுவநாதன் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், முரளி, கண்ணன், வசந்தா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!