கடலை வியாபாரிக்கு லாட்டரியில் கிடைத்த அதிஸ்டம்..!


கேரளாவில் 12 வருட விடா முயற்சியின் பலனாக கடலை வியாபாரிக்கு அரசு லாட்டரியில் ரூ. 60 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் சமீர். இவருக்கு சரீபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

சமீர் அந்த பகுதியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு அருகே ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் தனது கடையில் கேரள அரசு லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் இருந்து சமீர் லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். கடந்த 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்தாலும் அவருக்கு இதுவரை பரிசு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கேரள அரசு லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியாக சமீர் தற்போது மாறி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீர் தனக்கு 3 லாட்டரி சீட்டுகளை எடுத்து வைக்கும்படி கடைக்காரரிடம் கூறியிருந்தார். அவரும் 3 லாட்டரி சீட்டு களை எடுத்து அதில் சமீரின் பெயரையும் எழுதி வைத்திருந்தார். லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சமீருக்கு எடுத்துவைக்கப்பட்ட 3 லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்குத்தான் ரூ.60 லட்சம் பரிசு கிடைத்திருந்தது.

உடனே சமீரை அழைத்து இந்த தகவலை தெரிவித்த கடைக்காரர் அவரிடம் லாட்டரி சீட்டுகளை ஒப்படைத்தார். லாட்டரியில் பரிசு கிடைத்தது பற்றி சமீர் கூறியதாவது:-

நான் 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்த நிலையில் தற்போது எனக்கு ரூ.60 லட்சம் பரிசு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சமீபத்தில்தான் ரூ.15 லட்சம் கடன் பெற்று வீடு கட்டினேன். லாட்டரியில் கிடைத்த பணம் மூலம் கடனை திரும்ப செலுத்துவேன். எனது 3 பிள்ளைகளும் சிறந்த கல்வி கற்க பரிசு பணத்தை பயன்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!