கசோக்கி சமாதி மீது கைவைத்து உருகிய அமேசான் அதிபர்.. சல்மானுக்கு வார்னிங்!


சவுதி அரேபியா அரசு மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் புகைப்படத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பகிர்ந்து இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போன் ஹேக் செய்யப்பட விவகாரம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்டில் வெளியான கட்டுரைகளுக்கு பழி வாங்கும் விதமாக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. ஆனால் இந்த ஹேக்கிங் விஷயத்தை சவுதி அரசு முற்றாக மறுத்து இருக்கிறது.

உலகின் சிறந்த பத்திரிக்கையாளர் என்று பார்க்கப்பட்டவர்தான் ஜமால் கசோக்கி. இவர் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். சவுதி சல்மான் குறித்து தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டில் தீவிரமாக கட்டுரைகளை எழுதி வந்தார். இவர் சவுதியை சேர்ந்தவர்தான். சவுதியில் சல்மான் கொடுத்த அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி இவர் அமெரிக்காவில் குடியேறினார்.

கசோக்கி கட்டுரை
கசோக்கி பலமுறை சல்மான் குறித்து கட்டுரைகளை எழுதி உள்ளார். இதை பல முறை சல்மான் மறைமுகமாக தடுக்க முயன்றார். ஆனால் ஜெப் பெஸோஸ் கசோக்கிக்கு ஆதரவாக பேசி வந்தார். சல்மான் செய்த பல தவறுகளை கசோக்கி சுட்டிக்காட்டி கட்டுரையாக எழுதினார். சல்மான் குறித்து தினமும் பல அதிரடி கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதுதான் வாஷிங்க்டன் போஸ்ட்டை நடத்தி வந்த அமேசான் நிறுவனர் பெஸோஸ் மீது சல்மானுக்கு கோபம் வர காரணம்.

கொலை செய்தனர்
இதனால் தொடர்ச்சியாக கட்டுரை எழுதி வந்த கசோக்கியை சவுதி முதலில் கொன்றது. அமெரிக்காவில் வசித்து வந்த கசோக்கி கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்த போது கொல்லப்பட்டார். இவரது கொலைக்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருப்பது பின் சவுதி மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவும் உடலை வெட்டி மொத்தமாக அமிலத்தை வைத்து அவரின் உடலை கரைத்து கொன்றனர்.

இதுதான் காரணம்
இதற்கு பின்தான் சல்மான், பெஸோஸ் போனை ஹேக் செய்து, அவரின் புகைப்படங்களை வெளியிட்டார். வாஷிங்க்டன் போஸ்ட் கட்டுரைக்கு பதிலடியாக இப்படி ஹேக் செய்யப்பட்டது. சல்மான் இதன் மூலம் பெஸோஸ் விவாகரத்துக்கு வழி வகுத்தார். தற்போது இந்த ஹேக்கிங் விஷயம் வெளியே தெரிந்து, சல்மான் மொத்தமாக சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். கசோக்கி விஷயமும் இதனால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மறைமுக வார்னிங்
உலகமே இதை பற்றி பேச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சல்மானுக்கு மறைமுகமாக வார்னிங் கொடுக்கும் வகையில்தான் ஜமால் கசோக்கி சமாதியின் புகைப்படத்தை பெஸோஸ் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். இந்த டிவிட்டிற்கு கீழே பலரும் ஜமால் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள். பலரும் ஜமாலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். சல்மான் செய்த தவறுகளை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று குரல் கொடுத்த வருகிறார்கள்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!