6 கல்யாணம்.. கள்ளக்காதலிகளுடன் உல்லாச வாழ்க்கையை அனுபவித்த மாற்றுத்திறனாளி..!


சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஷ்ரப் அலி.. இவருக்கு வயது 24.. என்ஜினீயரிங் படித்தும் வேலை கிடைக்கவில்லை.. அதனால் ஒரு இன்டர்வியூக்கு பெங்களூர் சென்றுவிட்டு பஸ்ஸில் வந்தார்.. அநந்த சமயத்தில்தான் டேவிட் அறிமுகமானார்.. டேவிட்டுக்கு வயது 38.. கண் பார்வை இல்லை.

பஸ்ஸில் ஏற்பட்ட பழக்கத்தினால், வேலை வாங்கி தருவதாக சொல்லி உள்ளார்.. அதனால் போன வருடம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை 3 தவணையாக அஷ்ரப் அலி டேவிட்டிடம் தந்தார்… ஆனால் டேவிட் வேலை வாங்கியே தரவில்லை.. பலமுறை கேட்டு பார்த்தும் வேலையும் இல்லை, பணமும் கிடைக்கவில்லை.. இதனால் மனம் நொந்த அஷ்ரப் சூரமங்கலம் போலீசில் புகார் தரவும் டேவிட் கைதானார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாயின.

“எனக்கு கண் பார்வை இல்லை.. இருந்தாலும் பஸ்களில் நிறைய பயணம் போவேன்.. குறிப்பா பெண்கள் பக்கத்தில்தான் போய் உட்காருவேன்.. அவர்களிடம் “ரொம்ப கஷ்டப்பட்டு பஸ் ஏறினேன்”ம்மா என்று நைசா பேச்சு தருவேன்.. இரக்கம் கொண்டு, அவர்களும் என்னிடம் பேச ஆரம்பிப்பார்கள்.. உட்கார இடமில்லை என்றால், அந்த பெண்கள் எழுந்து என்னை சீட்டில் உட்கார வைப்பார்கள்.. பிறகு மெதுவாக செல்போன் நம்பரை வாங்கி கொள்வேன்.

அவர்கள் வீட்டுக்கு சென்று உருகி உருகி பேசுவேன்.. மேலிடத்தில் எனக்கு தொடர்பு இருப்பது போல காட்டி கொள்வேன்.. வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டுவேன்.. அதை நம்பி என்னிடம் பணம் தந்து வேலை வேண்டும் என்றுகேட்பார்கள்.. தருவார்கள்.. 6 வருஷத்தில், 62 பேரிடம் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் அதிகமாக பணத்தை மோசடி செய்திருக்கிறேன்..

இந்த மோசடி பணத்தில் 6 பெண்களை கல்யாணம் செய்தேன்.. இதுல 5 பேர் என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டாங்க.. இப்போதைக்கு மொரப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறேன்.. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த பெண்கள்.. இது தவிர சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள் எனக்கு உள்ளனர்.. அவர்களிடம் பணத்தை கொடுத்து ஜாலியாக இருப்பேன்.. ஒருவேளை ஏழை பெண்கள் என்றால், மோசடி பணத்தை செலவழித்து அவர்களுடன் ஜாலியாக இருப்பேன்” என்றார்.

இவ்வளவு விவரங்களையும் டேவிட் சொல்லியதை அடுத்து, போலீசார் சேலம் ஜெயிலில் அவரை அடைத்துள்ளனர்.. மேலும் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மாற்று திறனாளி ஒருவர் பண மோசடி செய்ததுடன்.. ஏகப்பட்ட கல்யாணம்.. கள்ளக்காதலிகளுடன் வாழ்க்கையை அனுபவித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!