புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி..!


நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதி ரிவர்ஸ் ஸ்டேட் பிராந்தியம். இங்குள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒரு குழுவினர் நள்ளிரவு 12.30 மணியளவில் வீடு திரும்பியபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான்.

இதில், 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிவர்ஸ் ஸ்டேட் பிராந்தியம் எண்ணெய் வளம் மிக்க பகுதியாக இருந்தபோதும், வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு ஆயுதக் குழுக்களின் புகலிடமாகவும் இருப்பதால் தொடர்ந்து வன்முறை தாக்குதல்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!