பிரபல டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா..? மீண்டும் மலர்ந்ததா காதல்..?


பிரபல சேனலில் சரவணன் மீனாட்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி.

இவர் திடீரென காதல் திருமணம் செய்து கொண்டது, இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி புயலை கிளப்பியது..

பெற்றோரை எதிர்த்து தான் இவர் கார்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்..

திடீரென ஒரு நாள் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார், மேலும் தனது இறப்பிற்கு காரணம் நந்தினியின் அப்பா என்று கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது கணவர் நிறைய பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், நானும் அவரிடம் பணம், நகை கொடுத்து ஏமாந்ததாகவும் மைனா கூறி இருந்தார்..

நந்தினியின் இந்த பேச்சினைக் கேட்ட கார்த்திக்கின் அம்மா நந்தினியைப் பற்றிய பல ரகசியங்களை அதிரடியாக வெளியிட்டார், அது பல சர்ச்சைகளை கிளப்பியது

கணவர் இறந்து 6மாதம் கூட ஆகாத நிலையில் சேனலில் தசாரா பண்டிகையின் போது நவநாகரீக உடையணிந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது இவர் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நட்பாக இருப்பதாகவும், புதிய ஆண்டு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த நடன ஹீரோவிற்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.-
Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!