ஆற்றுக்குள் விழுந்த ஜீப்… கேரள பெண் அதிகாரிக்கு நடந்த பரிதாபம்!


கேரளாவில் கட்டுப்பாட்டை மீறி ஆற்றுக்குள் ஜீப் விழுந்த விபத்தில் பெண் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பெருத்தல்மன்னா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் பாண்டியராஜ். கலால்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா. இவர் வனத்துறையில் பணியாற்றி வருகிறார். சர்மிளா ஆய்வுப் பணியை முடித்துவிட்டு அலுவலகத்துக்கு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார். ஜீப்பை உபைது என்பவர் ஓட்டி வந்தார்.

ஜீப் செம்மனூர் பவானி ஆற்றுப் பாலத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சுவர் தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது. விழுந்த வேகத்தில் வண்டி நசுங்கவே, ஓட்டுநர் மற்றும் அதிகாரி சர்மிளா இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். வண்டி ஆற்றில் விழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியா ஆற்றுக்குள் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். டிரைவர் உபைது பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், சர்மிளாவை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. கடைசியில் போராடி அவரை வெளியே கொண்டுவந்தனர்.

சுயநினைவு இல்லாத நிலையில் சர்மிளாவை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சர்மிளா உயிரிழந்தார். வனத்துறை பெண் அதிகாரி சர்மிளா உயிரிழந்தது அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்மிளாவுக்கு ரையனீஸ் என்ற நான்கு வயது மகன் உள்ளார்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!