இந்த ராசிக்காரர்களுக்கு உடலில் கவர்ச்சியான பாகங்கள் இவைதானாம்..!


பொதுவாகவே பெண்கள் தங்களது புற அழகின் மீது அக்கறை காண்பிப்பது இயற்கை. இறைவனின் அருளால் அவர்களது ராசிக்கேற்ப அழகின் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அப்படியெனில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உரிய தனித்துவமிக்க அழகு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.


மேஷம் : முக வடிவு

வலுவான அணுகுமுறையை விரும்பும் மேஷ ராசிக்காரர்கள், எதற்கும் தயங்க மாட்டார்கள். அவர்கள் கவர்ச்சியாக இருப்பதுடன், ஆச்சர்யமூட்டும் சமச்சீரான முக அம்சங்களை கொண்டிருப்பார்களாம். அவர்களது புருவம், மூக்கு, தாடை, வாய் போன்ற அனைத்தும் ஈர்க்கும் விதமாக இருக்குமாம்.


ரிஷபம் : கழுத்து

காளையின் அடையாளங்களைக் கொண்ட ரிஷபராசிக்காரர்கள் இயற்கையாகவே திடகாத்தமான உடல் வலிமையை பெற்றவர்கள். இவர்களது உடலில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம், தடித்த, நீண்ட, நேர்த்தியான கழுத்து.


மிதுனம் : நிறம்

மிகவும் துடிப்பான, உற்சாகமிக்கவர்களான மிதுன ராசிக்காரர்களின் ஆளுமை குணத்தை போலவே துடிப்பான உடல் அம்சம் அவர்களது நிறம் ஆகும். எவ்வளவு பெரிய கூட்டத்தில் நின்றாலும், தங்களது நிறத்தால் ஒளிர்ந்து காணப்படுவார்கள். எத்தனை வயதானலும், என்றும் இளைமையாக இருப்பார்கள்.


கடகம் : வயிறு
சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசிக்காரர்கள் உண்ணும் உணவை வேண்டி விரும்பி உண்பார்கள். உணவை நேசிக்கும் அளவிற்கு அவர்களது உடல் அமைப்பிலும் கவனம் செலுத்துவார்களாம். ஒரு டன் சாக்லேட்டை உட்கொண்டாலும், கடுமையாக வொர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார்கள். இவர்களது உடலமைப்பில் மிகவும் சுவாரஸ்யமிக்க பகுதி வயிறு.


சிம்மம் : நீண்ட கூந்தல்

சிங்கத்தின் அடையாளமாக விளங்கும் சிம்ம ராசிக்காரர்கள் கூந்தலுக்கு கூடுதல் கவனம் அளிப்பார்களாம். நீண்ட மிருதுவான கூந்தலினால் வசீகரிக்கும் தனித்துவம் இவர்களிடத்தில் இருக்கிறதாம்.


கன்னி : தோல்

அனைத்திலும் கச்சிதமாக திட்டமிட்டு செயல்படும் கன்னி ராசிக்காரர்கள், அதிக கவனம் செலுத்தி மேனியை பாதுகாப்பதில் வல்லவர்களாம். சருமத்தில் எந்த குறையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது இவர்களின் சிறப்பம்சம்.


துலாம் : வடிவமைப்பு

வளைவு சுழிவுடன் கூடிய கட்டுடல் அமைப்பை கொண்ட ராசிக்காரர்கள் உடலின் வடிவமைப்பில் அக்கறை காட்டுவார்களாம். கட்டுடல் மேனிக்கு பேர்போன கிம் கர்தாஷியான் இதற்கு எடுத்துக்காட்டு.


விருச்சிகம் : உதடு

கவர்ச்சியான, உணர்ச்சி மிகுந்த விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் ஈர்க்கும் மற்றும் வசீகரிக்கும் உடல் அம்சங்களை கொண்டவர். அவர்களின் உதடு, எதிரே நின்று பேசுபவர்களை நிலைகுழையச் செய்துவிடுமாம்.


தனுசு : பின்னழகு

வித்யாசமான செயல்கள் மூலம் தனித்து நிற்கும் தனுசு ராசிக்காரர்கள், விளையாட்டுத்தனமாகவும், தன்னிச்சையாகவும் சாகசங்களை செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அவர்களது உடல் அமைப்பு அழகாகவும், வலிமை கொண்டதாகவும் இருக்குமாம்.


மகரம் : கால்கள்

தலைமை குணம்படைத்த மகர ராசிக்காரர்கள் நீண்ட மற்றும் அழகான கால்களை கொண்டவர்களாம். மிருதுவான கால்களுக்கு அதிகம் ஸ்திரம் எடுத்து கவனித்துக் கொள்வார்களாம்.


கும்பம் : பாதம்

மிருதுவான மெல்லிய பாதம் கும்பம் ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாம். அவற்றை பராமரிக்க அதிக கவனம் செலுத்துவது அவர்களின் பொழுதுபோக்கு.


மீனம் : கண்

பார்வையால் வசீகரிக்கும் சிறப்பம்சம் கொண்ட மீன ராசிக்காரர்கள், கண் பார்வையிலேயே ஒருவரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர்களாம்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!