சமையலறையில் பிணமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி… கேரளாவில் பரபரப்பு..!


கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி பிரபலம் ஜாகி ஜான் அவரது வீட்டின் சமையல் அறையில் மர்மனா முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடலின் துறையில் இருந்த ஜாகி ஜான் அங்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொலைக்காட்சியில் அறிமுகமாகியுள்ளார்.

ரோஸ்பவுல் என்ற தொலைக்காட்சியில் ஜாகிஸ் குக்புக் என்ற ஷோவையும் நடத்தி வந்துள்ளார். தனது தாயுடன் கேரளாவின் குறவன்கோனம் என்ற பகுதியில் இவர் வசித்துவந்துள்ளார். இந்நிலையில்தான் வீட்டில் ஜாகி ஜான் மர்மமாக இறந்து கிடந்துள்ளார்.

ஜாகி ஜான் மரணத்திற்கு என்ன காரணம்? தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? ஏதேனும் விபத்தா என போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இந்நிலையில் இறப்பதற்கு முன் ஜாகி ஜான் தனது முகநூலில் வெளியிட்ட பதிவு ஓன்று வைரலாகிவருகிறது.

2019 நீங்கள் அழுத கண்ணீர், நீங்கள் 2020க்கு நடவு செய்ய விதைகளுக்கு தண்ணீர் ஊற்றட்டும் என ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் ஜக்கி ஜான்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!