செல்பி மோகத்தால் பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ரைசா, செல்பி மோகத்தால் காயமடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது, போன் அவரின் வாய் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் புகைப்படம் எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!