கர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..?


பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.

லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.

எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.

ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.

அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!