காதலியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டிய கொடூரம்.. காதலனின் வெறிச்செயல்


ஈரோடு மாவட்டம்சித்தோடு கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்கிற மணிகண்டன் (31). இவர் அய்யன்தோட்டம் வீதி பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இப்பகுதியை அடுத்துள்ள வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (23). இவருக்கு திருமணமான நிலையில், கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே கார்த்திகா ஒரு பெண் குழந்தையை பெற்றார். தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தால், கணவரை விட்டு விட்டு வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது அவருக்கும், செல்போன் கடை வைத்திருந்த மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து கார்த்திகாவின் பெற்றோர் அவரை கண்டித்த போது, மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வார் எனகூறியுள்ளார்.

இதையடுத்து கார்த்திகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனிடம்கேட்டுவந்தார். எனவே பவானி சோமசுந்தரபுரம் வீதியில் ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே 2 பேரும் தங்கி இருந்தனர். பெரும்பாலும் கார்த்திகா மட்டுமேஅங்கே இருந்தார். மணிகண்டன் அவ்வப்போது வந்து சென்றார். இந்தநிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 10 மணி அளவில் கார்த்திகா மற்றும் அவரது பெற்றோர் செல்போன் கடைக்கு சென்று மணிகண்டனிடம்திருமணம் குறித்து பேசியுள்ளனர்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்திகா கடுமையாக சத்தம் போட்டார்.

இதையடுத்து பெற்றோர், நீயே பேசி சமாதானம் செய்துவிட்டு வா என்று கூறி கார்த்திகாவை மட்டும் கடையில் விட்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது கார்த்திகா மட்டும் தனியாக இருந்ததால், அவரை கடைக்கு உள்ளோ அழைத்து சென்று, அவரை பிடித்து சுவரில் மோத வைத்து, கழுத்தை கையால் இறுக்கி, பின்னர், அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்ட கழுத்தை நெரித்து கொலை செய்தார்.பின்னர் உடலை எங்காவது கொண்டு சென்று மறைக்கும் நோக்கத்தில் ஒரு சாக்குப்பையில் திணித்து வைத்து விட்டு,இரவில் உடலை எடுத்துச்சென்று ரகசியமாக எரித்துவிட திட்டமிட்டார்.

இதற்கிடையே கார்த்திகாவை நீண்டநேரமாக காணாததால் அவரது தந்தை சுப்பிரமணியும் மற்றவர்களும் கடைக்கு வந்தனர். அவர்களைப்பார்த்ததும் கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா சாக்குப்பையில் திணிக்கப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி, மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரரிக்கப்பட்டு வந்த நிலையில்,நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு வழங்கினார். மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் பெண் குழந்தை மறுவாழ்வுக்காக தமிழக அரசு ரூ.2 லட்சமும், கார்த்தியிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தொகை ரூ.50 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என கூறினார்.-Source: Newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!