நந்தினி நாயகியின் திருமணம்! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ!


பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நந்தினி. இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம், ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் .


நந்தினி சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து அவர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தார். மேலும் குஷ்பூ நடிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் தொடரிலும் சில நாட்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நித்யா ராமுக்கு தற்போது மிகவும் கோலாகலமாக இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. நித்யாராமிற்கு 2014-ம் ஆண்டு வினோத் கௌடா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.


ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

அதனை தொடந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நித்யாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!