25 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளி டாக்டர்..!


இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்ட் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வமசாவளி மருத்துவர் மனீஷ் ஷா( வயது 50) . இவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 25 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான கூடி -ன் சோகமான வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஒரு பெண் நோயாளியை மார்பக பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியதாக மருத்துவர் மனீஷ் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மட்டுமின்றி தோள்பட்டை வலியால் அவதிக்குள்ளான பெண் ஒருவருக்கு திரைப்பட நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியின் புற்றுநோயைத் தடுக்கும் டபுள் மாச்டெக்டாமி (double mastectomy) ஐ மேற்கோள் காட்டி அவரின் மார்பகத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் மருத்துவர் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது…!

இந்த விவகாரம் 2013 ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததும் மருத்துவ பயிற்சியில் இருந்து ஷா இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட 21 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் 13-ஐ மருத்துவர் ஷா மறுத்துள்ளார்.

பெண்களை ஆக்கிரமிக்க யோனி பரிசோதனைகள், மார்பக பரிசோதனைகள் மற்றும் மலக்குடல் பரிசோதனைகள் செய்யும்படி வற்புறுத்தி உள்ளார் என வழக்கறிஞர் கேட் பெக்ஸ் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் ஓல்டு பெய்லி நீதிமன்ற நீதிபதி அன்னே மோலிநியூக்ஸ் எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!