ரஞ்சிதாவின் கண்ணசைவில்.. பாதாள அறையில் நித்தியானந்தா! சீடரின் பரபரப்பு பேட்டி!


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், பாலியல் வழக்கு, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக நித்யானந்தா உள்ளார்.2 பாலியல் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் நித்தியானந்தாவை வரும்12 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழக இளைஞர் விஜி, நித்தி மீது பரபரப்புபுகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “2009 ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு தனது தாயுடன் சென்று கடந்த 10 ஆண்டுகளாக நித்தியானந்தாவின் ஜோதியில் ஐக்கியமானேன்.ஆரம்பத்தில் பணம் மற்றும் தங்கத்தை இரு மடங்கு மூன்று மடங்கு ஆக்குவதாக கூறிய நித்தியை நம்பி தங்கள் குடும்ப சொத்துக்களை எல்லாம் விற்று லட்சகணக்கில் கொடுத்தோம். அதனை திரும்ப பெருவதற்காக நித்தியின் கும்பலில் இணைந்தேன்,நித்திக்காக பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது நிற்கதியாகி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இருபாலின சேர்க்கையாளரான நித்தி, பார்வதி பரமசிவன் என கூறி அழகான பெண்களை தனது பிடிக்குள் வைத்திருக்கிறார். இரு பாலினத்தவரோடும் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு நித்தியிடம் மிகவும் நெருங்கி பழகிய தன்னையும், தன்னுடைய நண்பர்களையும் அழைத்து பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டார். இதனால் நித்தியின் உருவத்தை தனது உடல் முழுவதும் பச்சை குத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார் விஜி.

தொடர்ந்து பேசிய அவர், நித்தியின் அத்தனை ஆசிரமங்களுக்கும் ராஜமாதாவாக இருப்பது நடிகை ரஞ்சிதா. டன் கணக்கிலான தங்க நகைகள் அவர்கைவசம் உள்ளது.ராணி போல உள்ள ரஞ்சிதாவின் கண் அசைவின்றி அங்கு எந்த ஒரு செயலும் நடக்காது, முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கவனித்துக் கொள்வது ஆகியவற்றில்மூளையாக செயல்படும் ரஞ்சிதா, அம்மா என்றழைத்தால் வயதானவர் போல தோன்றும் என்பதால் தன்னை எல்லோரும் அக்கா என்று அழைக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

நித்தி கிரீன் மேட் பின்னணியில் வீடியோவில் பேசுவதை வைத்து பார்க்கும் போது இது போன்ற தகவல் தொடர்புக்கான சகல வசதிகளும், அவர் கையில் வைத்திருக்கும் பொருட்களும் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் மட்டுமே இருப்பதாகவும், அங்கு பூமிக்குள் உள்ள பாதாள அறையில் மறைந்து இருந்து கொண்டு நித்தி, வெளி நாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை தனது இணைய தளம் மூலம் கட்டமைக்க முயல்வதாக தெரிவித்தார் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் முழுமையாக சோதனை நடத்தி ரஞ்சிதாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே நித்தி இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என கூறியுள்ளார். இந்த சீடரின் பரபரப்பு சாட்சியங்கள் உண்மையாக இருந்தால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நித்யானந்தா நிச்சயமாக போலீசார் கையில் சிக்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.-source: Newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!