ஆம்பளையா? பொம்பளையா? வைரமுத்து வீடியோவை வெளியிட்ட சின்மயி!


பிரபல பாடகி சின்மயி மீண்டும் கவிஞர் வைரமுத்துவை சீண்டியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சின்மயி “மீ டு” விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறியிருந்தார். அதன் பின்னர் வேறு சில பெண்களும் அவர் மீது பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

இதனை தற்போது புதுப்பிக்கும் வகையில் பிரபல பாடல் இயக்குநர் ஏ‌.ஆர்.ரஹ்மான் மற்றும் கவிஞர் வைரமுத்து பேசிய ஒரு வீடியோவை சின்மயி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் ஒருவர் வைரமுத்துவுக்கு “ஐ லவ் யூ” என்று கூறுகிறார். இதனை ரஹ்மான் அவரிடம் படித்து காட்டுகிறார். அப்போது வைரமுத்து கிண்டலாக “முதல்ல ஆணா பெண்ணானு பாருங்க; அப்புறம் வயசு பத்தி யோசிக்கலாம்” என்று கூறினார்.

பலர் வைரமுத்து கிண்டலாக பேசியதை சின்மயி சர்ச்சை குறியதாக மாற்றுவதாக பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் வைரமுத்துவை திட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!