செய்யிறது திருட்டு வேலை… தத்துவமாக பேசிய கொள்ளையன் முருகன்..!


“எனக்கு நிறைய திறமை இருக்கு.. எந்த வேலையை குடுங்க.. நான் அதை செஞ்சிடுவேன்” என்று தன் கேங் லீடர் முருகன் தத்துவம் பேச, சரி, சரி.. அப்பறம் பேசிக்கலாம் என்று போலீசார் அவரை அழைத்து சென்றனர். முருகனிடம் உறவு கொண்ட நடிகைகள் யார், லஞ்சம் பெற்றவர்கள் யார் யார் என்ற தகவல்கள் எல்லாம் இனி வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை தமிழக போலீசார் இங்கு தீவிரமாக தேடி வந்த நிலையில், திடீரென பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, சிறையில் அடைத்த முருகனை ஒரு திருட்டு வழக்கில் தொடர்புள்ளதால், பெங்களுர் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்.
அந்த சமயத்தில்தான் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடித்த நகைகளை கொள்ளிடம் ஆற்றுமணலில் புதைத்து வைத்திருப்பதாக முருகன் சொல்லவும், அதை மீட்க தமிழகம் வரும்போது நம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். பின்னர், புதைக்கப்பட்ட நகைகளை மீட்டு கோர்ட்டிலும் தெரியப்படுத்தினர்.

இதனிடையே, முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திருச்சி மாவட்ட குற்றவியல் 2-வது மாஜிஸ்ட்ரேட் திரிவேணியும் அதற்கு அனுமதி அளித்தார். இந்த உத்தரவையடுத்து, பெங்களூரு கோர்ட்டில் தெரியப்படுத்திவிட்டு, முருகனை திருச்சிக்கு நம் போலீசார் அழைத்து வந்தனர். நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் 2-வது மாஜிஸ்ட்ரேட் முன்பு முருகனை போலீசார் ஆஜர்படுத்தி, பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும்போது முருகன் செய்தியாளர்களிடம் பேசினான்.. அப்போது, “எனக்கு நிறைய திறமை இருக்கு.. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்பேன்.. நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்துடுவேன்.. நான் ஒரு நல்ல சினிமா புரொடியூசர்.. என் வாழ்க்கையில் ஜெயில் அனுபவம் எனக்கு நிறைய இருக்கு” என்று தத்துவமாக உதிர்க்க ஆரம்பித்தார். ஆனால், அதற்குள் போலீசார், சரி சரி அப்பறம் பேசிக்கலாம் என்று சொல்லி முருகனை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்து இவ்வளவு நாள் ஆன நிலையில், இப்போதுதான் தமிழக போலீசாரிடம் முருகன் சிக்கி உள்ளான். இனிமேல்தான் கொள்ளை நடந்தது, நடிகைகளுடன் தொடர்பு, யார் யாருக்கு முருகன் லஞ்சம் தந்தான் என்பன போன்ற பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. அதனால் நீண்ட நாளைக்கு பிறகு இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!