நான் மோசமான நடிகரா..? அழைப்பு இல்லை… பிரதாப் போத்தன் வருத்தம்


1980-களில் திரையுலகில் கோலோச்சிய நடிகர், நடிகைகளின் சந்திப்புக்கு அழைப்பு விடுக்காதது வருத்தமளிப்பதாக பிரதாப் போத்தன் தெரிவித்துள்ளார்.

1980-களில் திரையுலகில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சந்தித்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நட்சத்திர சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது.

நடிகர்கள் ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர். நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, சுகாசினி, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ள 80-களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தனது வருத்தத்தை சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர், ‘80-களின் நடிகர்களில் நான் மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை என நினைக்கிறேன். இது எனக்கு வருத்தம் தான்’, என பிரதாப் போத்தன் குறிப்பிட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!