7 வயசு குழந்தையின் கழுத்தை நெரித்து சாக்குமூட்டையில் கட்டி.. சித்தி அதிரடி கைது..!


கொலை செய்வதற்காக 7 வயது தீப்தியை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு வேக வேகமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் சாந்தகுமாரி.. பிஞ்சு என்றும் பாராமல் கழுத்தை நெரித்து, சாக்குமூட்டையில் கட்டி, ஏரியில் வீசிய சாந்தகுமாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டையில் வசித்து வந்த தம்பதி சதீஷ்குமார் – சத்யவேணி. இவர்களது ஒரே மகள்தான் தீப்திஸ்ரீ.

3 வருஷத்துக்கு முன்பு சத்தியவேணி இறந்துவிட்டார். அதனால், சாந்தகுமாரி என்ற பெண்ணை சதீஷ்குமார் கல்யாணம் செய்தார். சாந்தகுமாரி அதே ஊரை சேர்ந்த பெண்.. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.. தீப்திக்கு 7 வயது!

தனக்கு குழந்தை பிறக்கும்வரை தீப்தியை சாந்தகுமாரி நன்றாகத்தான் கவனித்து கொண்டார்.. ஆனால் பிள்ளை பிறந்தவுடன் குணம் மாறியது.. 7 வயது பிஞ்சு என்றும் பாராமல் தீப்தியை தினமும் அடிப்பது, உதைப்பது,உடம்பில் சூடு வைப்பது என கொடுமைகள் தொடர்ந்தன.. இதை ஒருநாள் கண்ணெதிரிலேயே பார்த்துவிட்டார் சதீஷ்குமாரின் அம்மா.

இதனால் பேத்தியை தன்னுடனே அழைத்து கொண்டு போய் வளர்த்து வந்தார். இதனால் மகளை பார்த்துக்க, அம்மாவுக்கு மாத மாதம் பணமும் தந்து வந்தார் சதீஷ்குமார். இதற்கும் சண்டை போட்டார் சாந்தகுமாரி.. அம்மாவுக்கு பணம் தர கூடாது என்று கறாராக சொல்லவும், பணம் தருவதை நிறுத்திவிட்டார். இதனால் சாந்தகுமாரி தாயார், கிராம பஞ்சாயத்தில் புகார் சொல்லவும், மாத மாதம் 2 ஆயிரம் தர உத்தரவிடப்பட்டது.

இந்த சமயத்தில்தான் தீப்தி, டிக்டாக் வீடியோவில் நடிக்க ஆரம்பித்தாள். பாட்டி வீட்டில்தான் அவளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது.. அதனால் டிக் டாக் வீடியோ செய்து ஊர்முழுக்க பிரபலம் ஆனாள். தீப்தியை திறமையை கண்டு ஊர்மக்களே ஆச்சரியப்பட்டனர்.

ஆனால், சாந்தகுமாரி ஆவேசம் அடங்கவே இல்லை.. தீப்தியை கொன்றுவிட்டால் பண பிரச்னை இருக்காது என்று பிளான் போட்டார்.. போன வெள்ளிக்கிழமை மதியமே ஸ்கூலுக்கு போன சாந்தகுமாரி, தீப்தியை அழைத்து கொண்டு ஒரு ஏரிக்கரைக்கு போனார்.. அங்கு சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றார்.. ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீசிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதனிடையே மகளை காணாமல் சதீஷ்குமார் போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த சிசிடிவி காமிராவில் ஆய்வு செய்தனர். அப்போதுதான், கொலை செய்வதற்காக இடுப்பில் குழந்தையை தூக்கி கொண்டு சாந்தகுமாரி நடந்து போய்கொண்டிருந்தார். இதைவைத்து, சாந்தகுமாரியை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, நீச்சல் குழுவினர் உதவியுடன் சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசப்பட்ட சிறுமியின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். சாந்தகுமாரியையும் கைது செய்து ஜெயிலில் வைத்தனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!