தமிழர் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு- பகல் 12 மணிவரை 50% வாக்குகள் பதிவு


இலங்கை அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் தமிழர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 50% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிங்களர் வாழும் தென்னிலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்களின் மலையகம் மற்றும் ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்கு நடுவே சுமூகமான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மல்லாகம், தெல்லிப்பளை, கீரிமலை, காங்கேசன்துறை, ஊரணி, பலாலி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல் கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

ஈழத் தமிழர் பகுதிகளில் காலை 10 மணிவரையிலான வாக்குப் பதிவு விவரங்கள்:

யாழ்ப்பாணம் – 25%

கிளிநொச்சி- 30%

வவுனியா- 25%

திருகோணமலை- 25%

மட்டக்களப்பு- 19%

மன்னார்- 30%

தென்னிலங்கை சிங்களர் பகுதியிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே பிற்பகல் 12 மணிவரை 50% வாக்குகள் பதிவாகி இருப்பதாக நீதி, நேர்மையான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!