விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இந்து மாணவியின் பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் தகவல்..!


பாகிஸ்தான் விடுதியில் சடலமாக மீட்பட்ட இந்து மாணவி உயிரிழப்பதற்கும் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி நம்ரிதா சந்தனி. இவர் தனது விடுதி அறையில் கடந்த செப்டம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டார். நம்ரிதா தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

விடுதி அறையில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது. ஆனால் நம்ரிதா சந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்றும் இது கொலையாகத்தான் இருக்குமென்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய மாணவியின் சகோதரர், ”இது தற்கொலை அல்ல. தற்கொலைக்காக தடயங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் வயரால் இறுக்கப்பட்டது போல கழுத்தைச் சுற்றி தடயம் உள்ளது. கைகளிலும் தடயம் உள்ளது. இது வயரால் இறுக்கப்பட்ட தடயம். ஆனால் துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாணவி நம்ரிதா மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கு முன்னர் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தற்போது கொலை என உறுதியாகியுள்ள நிலையில் கொலையாளி யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.-Source: puthiyathalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!