கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 148 மில்லியன் ரூபா சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கப்பட்டது

1


முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்கு, 148 மில்லியன் ரூபா, சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

‘இந்த ஆண்டு இறுதிக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ள 11 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும். இதற்காக அமைச்சரவை அனுமதியுடன், 148 மில்லியன் ரூபா சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தாம் அமைத்த கட்டடங்களையும் அப்படியே ஒப்படைப்பதற்கும் இணங்கியுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரதேசத்தில், 10 குளங்களின் மூலம் நீர்ப்பாசன வசதி பெறும் நிலங்கள் இன்னமும் சிறிலங்கா இராணுவத்தினர் வசம் உள்ளன.

இந்தக் குளங்களில் சில இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்தப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

One Comment

Comments are closed.