ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நேற்று மாலை முக.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் விஷால் அளித்த பேட்டி பின்வருமாறு:-

தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்றார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.