சூப்பர் மார்க்கெட்டில் சர்க்கரைக்கு போட்டி போட்ட ரஷியர்கள்- வைரல் வீடியோ!

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபேச்சு இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷியாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடை எதிரொலியால் ரஷியாவில் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது. சர்க்கரையின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் சர்க்கரையை இருப்பு வைப்பதற்காக அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் ரஷியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பலர் சர்க்கரையை வாங்குவதற்குகாக முந்திக்கொண்டு போட்டிபோடும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

சர்க்கரை உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்துவதற்காக சர்க்கரையை பதுக்கி வைப்பதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!