கொன்று குவிக்கப்பட்ட ஒரே குடும்பத்தின் 12 பேர்… நெஞ்சை பதற வைக்கும் காரணம்!


அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டக்லஸ்க்கு தெற்கே அமைந்துள்ளது லா மோரா இந்த பகுதியில் பண்ணை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே தேவாலயத்தில் உறுப்பினர்கள் அவர் இவர்கள் மெக்சிகோவில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு. இந்நிலையில் மோர்மன் பண்ணை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களின் திருமணத்திற்காக தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது மர்ம நபர்கள் முகமுடி அணிந்து கொண்டு அவர்கள் சென்ற மூன்று கார்களையும் தாறுமாறாக சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் சென்ற 9 குழந்தைகள் மற்றும் மொத்தம் 12 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில காவல்துறை மற்றும் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ராணுவம் தேசிய காவல்படை அதிகாரிகள் விதிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமூகவலைத்தள பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரான ஒருவர் தனது உறவினர் பெண் ஒருவர் ஆறுமாத இரட்டை குழந்தைகளுடன் இச்சம்பவத்தில் இறந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மற்றும் பலர் போதைப் பொருள் கடத்தும் கும்பல் தான் இந்த துப்பாக்கிச் சூட்டைப் நடத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு நபர் பிரிந்து சென்ற தேவாலயத்தின் உறுப்பினர்கள் மற்ற தேவாலயத்தின் உறுப்பினர்களை அடிக்கடி இந்த மாதிரியான தாக்குதலில் காயப்படுத்துவது மற்றும் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆனது மெக்சிகோவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.-Source: Times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!