கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகனும்.. ஆனா சுடுகாட்டுக்கு போய்ட்டா! கதறும் குடும்பம்!


திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணொருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவமானது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணராஜ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் சந்திரகலா. சந்திரகலாவின் வயது 18. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சென்ற மாதம் 30-ஆம் தேதியன்று திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக சந்திரகலா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். முதலில் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் காய்ச்சல் குறையாததால், அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரகலாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அதற்கான சிகிச்சைகளை தொடங்கினர். இந்நிலையில் இருவீட்டாரும் நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆனால் இதற்கு மருத்துவர்கள் சம்மதிக்கவில்லை. முழுமனதின்றி இருவீட்டாரும் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இதனிடையே நேற்று காலை துரதிஷ்டவசமாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி சந்திரகலா உயிரிழந்தார். இந்த செய்தியானது இரு வீட்டாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்ல வேண்டிய பெண், தியானத்திற்கு செல்கிறார்கள் என்று அவருடைய பெற்றோர் கதறி அழுதனர். இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!