பிறந்த நாளில் பிகினி உடையில் ஹாட் வீடியோ வெளியிட்ட இலியானா..!


பாலிவுட்டில் செட்டிலாகி முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் இலியானா. பாலிவுட்டில் நிலைமை மோசமாகும் போது எல்லாம் பேசாமல் டோலிவுட்டுக்கே திரும்பிப் போய்விடலாமா என்று அவர் யோசிக்காமல் இல்லை.

இருப்பினும் வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம் என்று வம்படியாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.


வெயிலில் வெளியே ரொம்ப நேரம் இருக்காதே கருத்துப் போய்விடுவாய் என்று அம்மா சொல்ல நான் என்ன செய்திருக்கிறேன் பாருங்க என்று கூறி பிகினி அணிந்து படுத்துக் கிடக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா.

மேலும் மற்றொரு பிகினியில் எடுத்த வீடியோவையும் அவர் போஸ்ட் செய்திருக்கிறார். நடிகைகள் இது போன்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டால் நெட்டிசன்கள் கேவலமாக கமெண்ட் போடுவார்கள்.

இலியானாவின் பிகினி புகைப்படத்தை பார்த்தால் மட்டும் ஆஹோ, ஓஹோ, ஹாட், செக்சி என்று பாராட்டுகிறார்கள். அதனாலேயே உச்சி குளிர்ந்து போய் மீண்டும், மீண்டும் பிகினி புகைப்படங்களை வெளியிடுகிறார் இலியானா.

இலியானா தற்போது தி பிக் புல் படத்தில் நடித்து வருகிறார். தன்னிடம் கை நிறைய படங்கள் இல்லாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!