போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்த துணை நடிகை… சிக்கியது எப்படி..?


சிதம்பரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூல் செய்த துணை நடிகையை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த 3 தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூரியப்ரியா (வயது 27). இவர் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள தனது 3 தோழிகளுடன் போலீஸ் வேடம் அணிந்து பணம் பறிக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து சூரியப்ரியா சப்-இன்ஸ் பெக்டர் வேடம் அணிந்து சிதம்பரம் உள்பட பல இடங்களில் பணம் வசூல் செய்தார்.

இது குறித்த தகவல் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தெரிய வந்தது. போலி வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்த துணை நடிகையை பிடிக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார், துணை நடிகை சூரியப்ரியாவை தீவிரமாக கண்காணித்தனர். இன்று மதியம் சூரியப்ரியா சப்-இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து சிதம்பரம் நகரில் உலா வந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிதம்பரம் நகர போலீசார் சூரியப்ரி யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் போல் போலி வேடம் அணிந்து எந்தெந்த இடங்களில் சூரியப்ரியா பணம் வசூலித்துள்ளார்? யார்-யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துணை நடிகை சூரியப்ரியாவுக்கு உதவியாக இருந்த அவரது தோழிகள் 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடமும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!