இந்த நடிகையுடன் தான் நெருக்கம் அதிகம் – பிக்பாஸ் ஹரிஷ் ஓபன் பேட்டி..!


பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.


ரைசாவை விட பிந்து மாதவி தான் நெருக்கம் அதிகம்-ஹரிஷ்.!

இவர்களது உறவு குறித்து கேட்டபோது பிந்து மாதவி மற்றும் ரைசா இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய ஹரிஷ் கல்யாண், ரைசாவை விட பிந்து மாதவி என்னுடைய நெருக்கமான தோழி. அதனால் தான் அவருடன் என்னால் அத்தனை நாள் அந்த பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று கூறினார்.-Source: hi2cinema

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!