மூளையில் அறுவை சிகிச்சை..! நேரலையில் ஒளிபரப்பிய 25 வயது பெண்! மிரள வைக்கும் காரணம்!


மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றபோது தைரியமாக நேரலையில் நோயாளி படம் பிடித்துக் காட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவை சேர்ந்தவர் ஜென்னா ஸ்கார்ட். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் cavernoma என்ற உடல் பாதிப்பு ஏற்பட்டதாக, தெரியவந்திருக்கிறது.

இதன்பேரில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். மூளையில் உள்ள நரம்பு ஒன்றில் ஏற்பட்ட கூடு போன்ற வளர்ச்சியை டாக்டர்கள் அகற்றினர். இதன்போது மயக்கமடையாமல் இருந்த ஜென்னா, படுக்கையில் இருந்தபடியே அதனை படம்பிடித்து, சமூக ஊடகங்களில் நேரடியாக லைவ் செய்துள்ளார்.
ஜென்னாவின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!