குழந்தையை மீட்கும் நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு


ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச்செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Dear friends, It’s been a heartbreaking Deepavali for all of India, especially Tamil Nadu….another precious life has…

Gepostet von Santhosh Babu am Montag, 28. Oktober 2019

குழந்தை சுஜித் மறைவு அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது, தமிழகத்தையே சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க நவீன கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச்செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!